லியோ படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பேசிய லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் பிரமோஷன் பணியில் ஈடுப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், யூடியூபில் உள்ள பிரபல தமிழ் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார்
‘லியோ திரைப்படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விடாதீர்கள்’என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யூடியூப் சேனல் நேர்காணலின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘முதல் 10 நிமிடங்களுக்காக சுமார் 12 மாதங்கள் உழைத்திருக்கிறோம். லியோ திரைப்படம் எமோஷனல் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.’- லோகேஷ்
‘லியோ திரைப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களுக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் இருக்குமா?’என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்‘லியோ திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரின் கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் பதியும் வண்ணம் உருவாக்கியிருக்கிறோம்.’என பதில் அளித்தார்.
‘மாஸ்டர் சாண்டி கதாபாத்திரம் எப்படி இருக்கும்’என்ற கேள்விக்கு, ‘லியோ திரைப்படம் வெளியானால் போதும் சாண்டி மாஸ்டர் பிஸி ஆகிவிடுவார். அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படத்தில் நிறைய சஸ்பென்ஸ் இருக்கு படத்தின் கடைசி நாற்பது நிமிடங்கள் கண்டிப்பாக உங்களை இருக்கையை விட்டு நகர விடாது என்று நினைக்கிறன்.’என்று கூறினார்.