Coolie BTS: லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் வெக்ஸ் ஆன ரசிகர்கள்; ஆறுதலுக்காக வெளியான கூலி BTS போட்டோஸ்!
லியோ படத்தை இயக்கி முடித்த கையேடு, லோகேஷ் கனகராஜ் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வருகிறார். இதுவரை தோல்வியே கண்டிடாத லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி இப்படம் உருவாகி வருவதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது சன் பிச்சர்ஸ் நிறுவனம்.
இந்நிலையில், இன்று லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 39-ஆவது படம் என்பதால்... இந்த படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
அமீர் கான் பிறந்தநாளுக்கு அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியது போல, லோகேஷ் கனகராஜ்... மற்ற ஸ்டார் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தற்போது வாழ்த்து கூறி உள்ளனர்.
இந்த BTS புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரம் இது ரசிகர்களுக்கு ஏதோ ஆறுதலுக்கு வெளியிட்டது போல் இருக்கிறது என விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.