டிசம்பர் 2023ல் உயிர் இழந்த திரைபிரபலங்கள்..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
![டிசம்பர் 2023ல் உயிர் இழந்த திரைபிரபலங்கள்..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்! டிசம்பர் 2023ல் உயிர் இழந்த திரைபிரபலங்கள்..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/1a3676351200b696640cbbd8e34e20468b500.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களாக இருந்தவர்களின் மறைவு என்றுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் டிசம்பர் 2023ல் திரையுலகம் பல நடிகர்களை இழந்துள்ளது. அவர்கள் யார் யார்?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![டிசம்பர் 2023ல் உயிர் இழந்த திரைபிரபலங்கள்..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்! டிசம்பர் 2023ல் உயிர் இழந்த திரைபிரபலங்கள்..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/87220655400ebeb21eb48fbad76a7fd676704.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
கேப்டன் விஜயகாந்த் : (டிசம்பர் 28 ) திரையுலகில் தனித்துவமான நடிகராகவும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
![டிசம்பர் 2023ல் உயிர் இழந்த திரைபிரபலங்கள்..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்! டிசம்பர் 2023ல் உயிர் இழந்த திரைபிரபலங்கள்..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/0de5cf1949fdedfbe46ca34fe55c50bdcfae5.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
நடிகர் போண்டா மணி : (டிசம்பர் 24 ) தனித்துவமான உடல்மொழியாலும், அப்பாவித்தனமான நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நகைச்சவை நடிகர் போண்டா மணி. நடிகர் வடிவேலு மற்றும் விவேக் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். டிசம்பர் 24ம் தேதி கிட்னி பாதிப்பு ஏற்பட்டு காலமானார்.
இயக்குநர் ரா. சங்கரன் : (டிசம்பர் 14 ) ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி அப்பாவாக Mr . சந்திரமௌலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இயக்குநரும் நடிகருமான ரா. சங்கரன். தேன் சிந்துதே வானம், தூண்டில் மீன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் : (டிசம்பர் 13 ) 2013ஆம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த நகைச்சுவை தொடரான ‘ப்ரூக்லீன் 99’ என்ற தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் உடல்நலக் குறைவால் டிசம்பர் 13ம் தேதி காலமானார்.
நடிகர் மதுரை மோகன் : (டிசம்பர் 9 ) 'முண்டாசுப்பட்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான குணச்சித்திர நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் டிசம்பர் 9ம் தேதி காலமானார்.
நடிகை லக்ஷ்மிதா சஞ்சீவன் : (டிசம்பர் 9) சவுதி வெள்ளக்கா, உயரே உள்ளிட்ட ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை லக்ஷ்மிதா சஞ்சீவன் திடீர் மாரடைப்பு காரணமாக டிசம்பர் 9ம் தேதி காலமானார்.
நடிகை லீலாவதி : (டிசம்பர் 8) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பழம்பெரும் நடிகை லீலாவதி. பட்டினத்தார், சுமைதாங்கி, அவள் ஒரு தொடர்கதை, நான் அவனில்லை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 8ம் தேதி காலமானார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -