Thalaivar 171 : லோகேஷுடன் 3 ஆவது முறை இணைகிறாரா விஜய் சேதுபதி?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் ஷூட் முடிந்த பின், அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராக் ஸ்டார் அனிரூத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. சமீபத்திய யூடியூப் நேர்காணலில் பேசியிருந்த நடிகர் சிவகார்த்திகேயன் தலைவர் 171 திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தலைவர் 171 நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது உண்மையானால் ரஜினியுடன் 2 ஆவது முறையும் லோகேஷுடன் 3 ஆவது முறையும் இணைவார் விஜய் சேதுபதி.