Dhoni Speech : தீபக் சஹாரை கலாய்த்து தள்ளிய தோனி..சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம்!
இந்திய கிரிக்கெட் வீரரான தோனியும், அவரது மனைவி சாக்ஷுயும் இணைந்து திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதற்கு தோனி எண்டர்டெயின்மெண்ட் எனப் பெயரிடப்பட்டது. இந்நிறுவனத்தின் முதல் ப்ராஜெக்ட் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.
இதனிடையே நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
இயக்குநர் ரமேஷ் தமிழ் மணி எல்ஜிஎம் படத்தில் நடிக்க தன்னிடம் கால்ஷீட் கேட்ட போது, யோசித்து கொண்டிருந்ததாகவும், தோனியிடம் பேசி பேட் வாங்கி தருகிறேன் என இயக்குநர் கூறியதால் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் யோகி பாபு கூறியுள்ளார்.
அடுத்தாக பேசிய தோனி, “அம்பாத்தி ராயுடு சென்னை சூப்பர் அணியில் இருத்து ஒய்வு பெற்றதால் தொடக்க ஆட்டகாரர் இடம் காலியாக இருக்கிறது.நான் சி.எஸ்.கே நிர்வாகம் இடம் உங்களுக்காக பேசுகிறேன் ஆனால் நீங்கள் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் விட்டு விடுங்கள். ஒருவேலை அணியில் சேர்ந்தால் நீங்கள் தொடர்ந்து தினசரி விளையாட வேண்டியது இருக்கும்” என யோகி பாபுவை பார்த்து பேசினார்.
பின்னர் தீபக் சஹாரை குறித்து கூறுகையில் “ தீபக் சஹார் ஒரு போதைப்பொருள் போன்றவர் உடன் இருக்கும் போது ஏன் இருக்கிறது என்று தோன்றும் இல்லாத போது எங்கே போனது என்று தோன்றும்”
“என்னுடைய மகள் ஜிவா 8 வயதில் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தை தீபக் 50 வயதில் பெற்றுவிடுவார்” என்று தோனி பேசியதால் அங்கு சற்று நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.