Actor Vijay Meetup : 234 தொகுதிகளை குறி வைக்கும் நடிகர் விஜய்..அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன?
இன்று நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
சமீப காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தற்போது பனையூரில் இன்று காலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பது அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் ஆலோசனை கூட்டத்தில் 234 தொகுதிகளில் உள்ள முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன் 17ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 234 தொகுதி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார் விஜய்.
அதைபோல் கடந்த உலக பட்டினி தினத்தன்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் போதும் 234 சட்டமன்ற தொகுதிகளை குறிவைத்து அறிவிப்புகள் வெளிவந்தன. இது நடிகர் விஜய்யின் அரசியல் அசையை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.