Leo Success Meet : விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழாவில் நடந்த ஹைலைட்ஸ்!
“இரண்டு வேட்டைக்கார்கள் காட்டிற்கு செல்கிறார்கள். ஒரு வேட்டைக்காரர் வில் அம்பையும் இன்னொரு வேட்டைக்காரர் ஈட்டி எடுத்துக் கொண்டும் போகிறார்கள். வில் அம்பு எடுத்துச் செல்பவர் முயலை வேட்டையாடுகிறார். ஈட்டியை எடுத்துச் செல்பவர் யானையை வேட்டையாட முயற்சி செய்து தோற்றுப் வெறுங்கையோடு திரும்புகிறார். இந்த இரண்டு நபர்களில் யார் வெற்றிபெற்றது என்று கேட்டால் யானையை வேட்டையாட முயற்சி செய்தவர் தான் வெற்றி பெற்றார். எப்போதும் நமக்கு எளிமையாக முடியும் ஒன்றை செய்வதைவிட நமக்கு கடினமான ஒன்றை முயற்சி செய்வதே வெற்றி”-விஜய்யின் குட்டி ஸ்டோரி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“புரட்சி தலைவருன்னா அது ஒருத்தர்தான், நடிகர் திலகம்னா அது ஒருத்தர்தான், புரட்சிக்கலைஞர் என்றால் அது ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர்தான், உலகநாயகன் என்றால் அது ஒருத்தர்தான், தல என்றால் அது ஒருத்தர்தான்.. அதேபோல் தளபதிக்கு அர்த்தம் தெரியும்ல?.. மன்னருக்கு கீழே அவர் இருப்பாரு..மன்னர்கள் ஆணையிடுவதை அவர்கள் நிறைவேற்றுவார்கள். என்னை பொறுத்தவரை மக்களாகிய நீங்கள்தான் என் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழே இருக்கிற தளபதி. நீங்க ஆணையிடுங்க நான் செஞ்சிட்டு போறேன்” - விஜய்
கேள்வி : கல்வி விஜய் சொன்ன பதில் : “அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.” கேள்வி : மக்கள் விஜய் சொன்ன பதில் : “பிடிச்சா தட்டி குடுப்பாங்க. பிடிக்கலனா..” கேள்வி : 2026 விஜய் சொன்ன பதில் : “2025க்கு பின் 2026 வரும். கால் பந்து உலகக் கோப்பை நடக்கும். கப்பு முக்கியம் பிகிலு...”
“வெற்றிமாறன்... ஏற்கனவே அவரை வில்லனா நடிக்க வைக்க முயற்சி பண்ணேன். ஆனா, அது கைகூடல.” - லோகேஷ் கனகராஜ்
கேள்வி : என்ன பரிசு வரும்? லோக்கியின் பதில் : “ஹெலிகாப்டருக்கு பெயிண்ட் அடிச்சிட்டு இருக்காங்க..” கேள்வி : அப்போ லியோ 2க்கு ஹெலிகாப்டர்லதான் வருவீங்க..? லோக்கியின் பதில் : “அவரு கண்ண காமிச்சா போதும்..பண்ணிடலாம்”
“ஸ்கூல்ல ஒன்னா படிச்ச நண்பரை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணும்போது எப்படி இருக்குமோ அப்படிதான் லியோல விஜய்யை பார்க்கும்போது எனக்கு இருந்துச்சு.அதே கம்ஃபர்ட், அதே அன்பு, அதே மரியாதை.. எனக்கு சிறப்பான கோ ஸ்டாரா இருப்பதுக்கும் நல்ல ஃப்ரெண்டா இருப்பதுக்கும் நன்றி. ஒரு கோ ஸ்டாரோட எனக்கு மிக நீண்ட பயணம் இருந்துச்சுனா அது விஜய்யோடதான். வீடு ஒரு இடமில்ல.. அதுவும் ஒரு ஆள்னு விஜய் சொல்லுவாரு. எனக்கு லியோ செட் அப்படி தான் இருந்துச்சு.விஜய் எனக்கு இன்னும் காரப்பொரி வாங்கி தரல. இன்னொரு படம் பண்ணாலாமா?” - திரிஷா
“மக்களுக்கு நல்லது பண்ணனுங்கற எண்ணம் இருந்தாலே போதும். அது அவருக்கு இருக்கு. சீக்கிரமே அரசியலுக்கு வந்துடுவாரு - அர்ஜுன்
என் வாழ்வில் நான் கேள்விப்பட்ட இரண்டு லெஜண்டுகள் மைக்கேல் ஜாக்சனும் ப்ரூஸ் லீயும்தான். ஆனால், நான் நேரில் கண்ணால் பார்த்த லெஜண்ட் விஜய்தான் - மிஷ்கின்
“நைட்டு 1 மணிக்கு ஃபோன் போட்டு ஃப்ளாஷ்பேக்ல ஏன் பொய் சொன்னீங்கன்னு கனடால இருந்து கேட்குறாங்க” - மன்சூர் அலிகான்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -