Harold Das : தெறிக்கே.. ஹரோல்ட் தாஸ் க்ளிம்ப்ஸ் வீடியோவின் குட்டி விமர்சனம் இங்கே!
விஜய் பிறந்தநாளையொட்டி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பர்ஸ்ட் சிங்கிளான ‘நான் ரெடிதான்’பாடலும் வெளியானது. பின்னர், சஞ்சய் தத்தின் பிறந்தநாளுக்கு அவர் நடித்துள்ள ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.இதனையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜூன் நடித்துள்ள ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆந்திராவில் பதிவுசெய்யப்பட்ட காரில் வந்து இருங்குகிறார் ஹரோல்ட் தாஸ். அதன் பின், நான் ரெடிதான் பாடல் மற்றும் ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ் காட்சியில் இடம்பெற்ற அதே ஃபாக்ட்ரி செட்டிற்குள் நுழைகிறார்.
முன்பு வந்த க்ளிம்ப்ஸில் இருக்கும் கும்பள் இதிலும் காணப்படுகிறது. வெறித்தனமாக ஒருவரின் கையை வெட்டும் காட்சி இடம்பெறுகிறது. உற்று பார்க்கும் போதுதான் தெரிகிறது, ஹரோல்ட் தாஸால் தாக்கப்படும் நபர் சாண்டி மாஸ்டர் என்று.
லோக்கியின் படத்தில் சிகரெட் இல்லையென்றால் எப்படி..வாயில் சிகரெட் உடன், அர்ஜுன், ‘தெறிக்கே’என்ற அவரின் சிக்னேச்சர் சொல்லை கூற, க்ளிம்ப்ஸ் காட்சி நிறைவு பெறுகிறது.
விக்ரம் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின்னணி இசையமைத்த அனிருத், இப்படத்திற்கும் அதையே செய்துள்ளார். அத்துடன் லியோ குழுவால் வெளியிடப்பட்ட அனைத்திலும் ப்ரவுன் நிற டோன் காணப்படுகிறது. ரோலக்ஸின் அப்பாதான் ஹரோல்ட் தாஸ், என நெட்டிசன்கள் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
அர்ஜுன் வந்திருக்கும் கார், ஆந்திராவில் பதிவு செய்யப்பட்ட கார் என்பதால், இந்திய முழுவதும் அதன் கிளைகளை வைத்துள்ள கும்பலாக தாஸ் அண்ட் கோ இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. கதாபாத்திரங்களின் பெயர் தாஸ் என முடிவதால், இது சகோதரர்களால் நடத்தப்படும் இயக்கமாக இருக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -