Legend Saravanan : சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த லெஜண்ட் சரவணன்!
தி நகரில் திரும்பும் பக்கமெல்லாம் சரவணா ஸ்டோர் இருப்பது போல் சுதந்திர தினமான இன்று சமூக வலைதளத்தில் பார்க்கும் பக்கமெல்லாம் லெஜண்ட் சரவணன் உள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜோசப் டி. சாமி, ஜெரால்ட் ஆரோக்கியம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்த படம் தி லெஜண்ட்.
இந்த படம் வெளியாகி நெட்டிசன்களுக்கு நல்ல தீனி போட்டது.
தற்போது சுதந்திர தினத்தை லெஜண்ட் சரவணா குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த படத்தை எப்பொழுது நடிப்பீர்கள் என்று ஒரு குழந்தை கேட்டதற்கு, “இத்தனை நாள் வரை நல்ல கதைக்காக காத்திருந்தேன்” என பதில் கூறினார் லெஜண்ட் சரவணன்.
“தற்போது எனக்கு நல்ல கதை அமைந்துள்ளது, கூடிய விரைவில் படத்தை தொடங்கி விடுவோம்” என்று கூறினார். அத்துடன் “தலைவர் நிரந்தரம்” என்ற ஜெயிலர் பாடலுக்கு குழந்தைகளுடன் நடனம் ஆடினார்.