Arjun as Harold Das : மாலை 5 மணிக்கு வருகை தருகிறார் ஹரோல்ட் தாஸ்.. லியோ படத்தின் புது அப்டேட் இதுதான்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ
இப்படம் குறித்த பல்வேறு வதந்திகள் வெளியே கசிந்தாலும் அதன் அப்டேட் குறித்து மிகவும் கவனமாக இருந்து வருகிறது படக்குழு.
அதற்கு ஏற்றவிதமாக விஜய் பிறந்த நாளன்று ‘ நான் ரெடி தான்’ பாடலையும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.
அதைதொடர்ந்து சஞ்சய் தத் பிறந்த நாளையொட்டி ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவரது கிளிம்ஸ் வீடியோ வெளியானது.
சமீபத்தில் லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் பேட்டி ஒன்றில் பேசும் போது, அர்ஜுன் பிறந்த நாளன்று, அவரது கேரக்டர் குறித்த க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகும் என தெரிவித்தார்.
தற்போது இது குறித்து செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம், அதன் ட்விட்டர் பக்கத்தில், ‘ஹாரோல்ட் தாஸின் 5 மணிக்கு வருகை தருவார்’என பதிவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்கள் அப்டேட் வந்தது முதல் ட்விட்டரில் ஹாரோல்ட் தாஸ் கிளிம்ஸ் என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.