Legend Saravanan : லெஜெண்ட் சரவணனுடன் கைகோர்க்கும் கருடன் இயக்குநர்!
தமிழ்நாட்டின் பிரபலமான தொழிலதிபர்களில் லெஜண்ட் சரவணனும் ஒருவர்.
இவருக்கு சினிமா மீது ஏற்பட்ட காதலால், 2022 ஆம் ஆண்டில் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தி லெஜண்ட் படத்தை சரவணனே தயாரித்து நடித்து இருந்தார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.
45 கோடி செலவில் எடுக்கப்பட்ட தி லெஜண்ட் படம் 650 திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் படம் பார்த்த பலர் சரவணனின் நடிப்பையும் நடனத்தையும் ட்ரோல் செய்தனர்.
அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சரவணன் அடுத்த படத்திற்கு தயாரானார். புதிய படத்திற்காக புதிய லூக்கை மாற்றி கொண்டு காஷ்மீர் வரையிலும் சென்று வந்தார்.
லெஜண்ட் சரவணன் தற்போது கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரோடு கைகோர்த்துள்ளார். கையில் துப்பாக்கியோடு கேங்ஸ்டர் லுக்கில் இருக்கும் சரவணன் இன்ஸ்டாகிராமில் புது படம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.