Cinema Updates : கோலிவுட் முதல் டோலிவுட் வரை... லேட்டஸ்ட் சினிமா நியூஸ் இங்கே!
அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் இயக்கத்தில் நடிகர் சதிஷ் நடித்து வரும் திரைப்படம் 'கன்ஜூரிங் கண்ணப்பன் பார்ட் 2' இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
1991ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'குணா' திரைப்படம் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அனஸ்வர ராஜன் நடிக்க இருக்கும் இப்படத்தை ஃபஹத் பாசில் மற்றும் பிரண்ட்ஸ் மற்றும் அர்பன் அனிமல் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
ஆவேஷம், ரோமன்சம் படத்திற்கு பிறகு நடிகர் சஜின் கோபு அடுத்ததாக ஜித்தின் மாதவனுடன் இணைந்து ஸ்ரீஜித் பாபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
ரவி தேஜா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாக இருக்கும் RT75 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. அறிமுக இயக்குநர் பானு போகவரபு இப்படத்தை இயக்குகிறார்.
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'ராயன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 26க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.