டிசம்பரில் நடக்கும் லால் சலாம் இசை வெளியீட்டு விழா.. இந்த முறை ரஜினி என்ன கதை சொல்வார்?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ரந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 2024 பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகிறது.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. லால் சலாம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களுடன் லால் சலாம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 10ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.