Violence Against Children: குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு வாரம்..உங்கள் குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லி கொடுங்க..!
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 18 முதல் 24ஆம் தேதி வரை விழிப்புணர்வு வாரம் அணுசரிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்பாக அறிவித்தது.
உங்கள் குழந்தைகளை வன்முறைகளில் இருந்து பாதுகாக்கவும் தன்னை தானே தற்காத்து கொள்ளவும் அவர்களுக்கு இவற்றை சொல்லி கொடுங்கள்.
யாராவது உங்களின் அந்தரங்க பாகங்களை தொட்டாலோ, இல்லை அவர்களது அந்தரங்க பாகங்களை தொட சொன்னாலோ சத்தமாக வேண்டாம் என்று சொல்ல கற்று கொடுங்கள்.
யாரவது உங்கலுக்கு விருப்பமில்லாத வகையில் உங்களிடம் நடந்து கொண்டால் உடனே உங்கள் பெற்றோரிடம் சொல்லவும்.
சிலர் பரிசு, சாக்லேட் போன்றவை கொடுத்து உங்களை அழைத்தாலோ உங்கள் பெற்றோர்கள் அழைத்ததாக சொல்லி அழைத்தலோ நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம்.
இவை அனைத்தையும் தாண்டி குழந்தைகள் ஏதேனும் வன்முறையை எதிர்கொண்டால், பள்ளிக் கல்வித்துறையின் மாணவர் உதவி எண் 14417 அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 அறிவிக்கப்பட்டுள்ளது.