KV Anand : பல வெற்றிகளை கொடுத்த கலைஞன்... கே.வி. ஆனந்த் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநரும் ஒளிப்பதிவாளருமாக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளர்.
90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவங்கினார். கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றினார்.
1994ம் ஆண்டு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
முதல் படமே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது.
2005ம் ஆண்டு வெளியான 'கனா கண்டேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
2021ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மாரடைப்பால் உயிர்இழந்தார். அப்போது அவருக்கு வயது 54 .
இன்று மூன்று ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒரு நல்ல கலைஞனை இந்த தமிழ் சினிமா இழந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -