HBD KS Chithra : சின்ன குயில் சித்ராவுக்கு இன்று பிறந்தநாள்!
பின்னணி பாடகி கே.எஸ் சித்ராவின் முழுபெயர் சாந்தகுமாரி சித்ரா என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, துளு, ராஜஸ்தானி, உருது, ஒடியா, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடியுள்ளார்
இதுபோக மலாய், லத்தீன், அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்கள உள்ளிட்ட பன்னாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இன்று வரை 25,000 பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, ஹம்சலேகா, கீரவாணி உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக்கு இவர் குரல் உயிராய் அமைந்துள்ளது.
சின்னக்குயில் சித்ரா என்று அழைக்கப்படும் இவர், இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகியவற்றை பெற்றுள்ளார்.
பிரிட்டன் அரசால் கெளரவிக்கப்பட்ட முதல் இந்திய பெண் என்ற பெருமையும் சீன அரசால் பாராட்டப்பட்ட ஒரே இந்திய பாடகர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -