Kollywood Upcoming Movies : அடுத்தடுத்த பாகங்களை உறுதி செய்த தமிழ் பட இயக்குநர்கள்!
சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வடசென்னை அன்பின் எழுச்சி என தலைப்பிடப்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படம் கலகலப்பு. இந்த படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் தொடங்க உள்ளதாக சுந்தர் சி கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா. இந்த படத்தின் மூன்றாம் பாகத்திற்கு ஜிகர்தண்டா ட்ரிபுள் எக்ஸ் என தலைப்பிட்டுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட் தொடங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரிய நடித்துள்ள கங்குவா படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது என தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.