HBD Trisha : ‘அவளது அழகெல்லாம் எழுதிட ஒரு பாஷை இல்லையே..’ தமிழ் சினிமாவின் பேரழகி த்ரிஷாவின் பிறந்தநாள் இன்று..!
1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி சென்னையில் பிறந்த த்ரிஷா சர்ச் பார்க்கில் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பையும் படித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகல்லூரி காலத்தில் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட த்ரிஷா 1999 ஆம் ஆண்டின் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்
இதனை தொடர்ந்து, 1999ல் வெளியான பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டிய த்ரிஷா, 2002 ஆம் ஆண்டு மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
2003ல் அவரின் மூன்றாவது படமாக சாமி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் தாக்கத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள், த்ரிஷாவை கொண்டாட தொடங்கினர்.
கடந்த 21 வருடங்களில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, கார்த்தி, ஜீவா என அனைவரது படங்களிலும் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கனவுப்படமாக வெளியான பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் ஜொலித்தார்.
இப்படி கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் நாயகியாக வலம் வரும் த்ரிஷாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -