Kisi Ka Bhai Kisi Ki Jaan : என்னடா பண்ணி வச்சுருக்கீங்க..சல்மான் கான் படத்தை ட்ரால் செய்யும் அஜித் ரசிகர்கள்!
அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான வீரம் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை ஹிந்தியில் கிசி கா பாய் கிசி கா ஜான் என ரீமேக் செய்துள்ளனர்.
எப்போதும் தமிழ் படங்கள், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் போது, ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்ப அதில் சில மாற்றங்கள் செய்யப்படும். கைதி படம் ஹிந்தியில் போலாவாக ரீமேக் செய்யப்படும் போது, இது கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழில் தரமாக எடுக்கப்பட்ட வீரம், சல்மான் கானுக்கு ஏற்ப சிறிது மாற்றப்பட்டுள்ளது. தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நாசர் கதாபாத்திரத்தில், டகுபதி வெங்கடேஷ் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசரும், ட்ரெய்லரும் அஜித் ரசிகர்களால் பயங்கரமாக ட்ரால் செய்யப்பட்டது. அத்துடன் பதுகம்மா, யேண்டம்மா பாடல்களையும் தமிழ் ரசிகர்களின் ட்ரால் லிஸ்டில் இடம்பெற்றது.
எதிர்நீச்சல் படத்தில் பாடிய ஹனி சிங்கர், கிசி கா கிசி கி ஜான் படத்தில் “லெட்ஸ் டான்ஸ் சோட்டு மோட்டு” என்ற பாடலை பாடியுள்ளார்.
குழந்தைகள் பாடும் ரைம்ஸ் பாடல் வரிகளின் தொகுப்பை கொண்ட இது, இணையத்தில் வைரலாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது