Kiara Advani Photos : சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!
2014 ஆம் ஆண்டில் ஃபக்லி என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் கியாரா அத்வானி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎம் எஸ் தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்து இந்திய அளவில் பரிச்சயமானார்.
தெலுங்கு சினிமா பொறுத்தவரை, பரத் அனே நேனு, வினே விதய ராமா படத்தில் நடித்துள்ளார். அத்துடன் ராம் சரணுடன் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
லஸ்ட் ஸ்டோரீஸ், கபீர் சிங், லக்ஷ்மி, ஷேர் ஷா, சத்யா ப்ரேம் கி கதா ஆகிய பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார்.
ஷேர் ஷா படப்பிடிப்பில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஆன் ஸ்கிரீனில் உருவான காதல் ஆஃப் ஆன் ஸ்கிரீனிலும் தொடர்ந்தது. பின் கியாரா, சித்தார்த் மல்ஹோத்ராவை 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சினிமா உலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த கியாரா, தனது வெற்றியை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -