HBD Kiara Advani : எம் எஸ் தோனி நடிகை கியாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
எம் எஸ் தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ், ஷெர்ஷா உள்ளிட்ட படங்களில் நடித்து சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்து கொண்ட கியாரா பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
பாலிவுட்டில் அறிமுகம் ஆவதற்கு முன்பே, விளம்பர படம் ஒன்றில் அவர் அம்மாவுடன் குழந்தை பருவத்திலே நடிக்க தொடங்கிவிட்டார் கியாரா
முகேஷ் அம்பானியின் மகளும் ஆனந்த் பிரமலின் மனைவியுமானா இஷா அம்பானியும் கியாராவும் திருபாய் அம்பானி பள்ளியில் ஒன்றாக படித்து நண்பர்களாகி விட்டார்களாம்
ஊடகம் சார்ந்த படிப்பை, பெற்றோர்கள் சொன்ன காரணத்திற்காக படித்து முடித்தாலும், அவர் மனதிற்குள் தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம்.
படிப்பை முடித்த உடன் நடிப்பதற்கு முன்பு, அவரது அம்மா தலைமை ஆசிரியராக இருக்கும் பால்வாடியில் வேலை பார்த்து வந்தாராம்.
பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் ரியல் பெயர் ஆலியா அத்வானிதான். அஞ்சானா அஞ்சானி படத்தில் வரும் பிரியங்கா சோப்ரா கதாபாத்திரத்தின் பெயரான கியாரா தனக்கு பிடித்து போனதால் அவரின் பெயரை கியாரா அத்வானியாக மாற்றியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார் கேம் சேஞ்சர் நடிகை