Kiara Advani: இன்று பிறந்தநாள் கொண்டாடும் அழகி கியாரா அத்வானியின் டாப் டக்கர் லுக்ஸ்!
பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் கியாரா அத்வானி. இன்று அவர் தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா, தனது ஃபேஷன் சென்ஸ் மூலமும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க ஒருபோதும் தவறவில்லை. இந்நிலையில் அவரது சிறந்த சில லுக்ஸ்களை தற்போது காணலாம்.
’சத்ய ப்ரேம் கி கதா’ திரைப்படத்தின் போது க்ரீம் நிற ’v’ நெக் பாடி சூட் மற்றும் மினி ஸ்கர்ட்டில் அசத்திய கியாரா.
பேக்-லெஸ் சாட்டின் கௌனில் மனதை கொள்ளை அடித்த கியாரா அத்வானி.
உலகே தற்போது பார்பி ஃபீவரில் ‘பிங்க் மயம்’ ஆகி வரும் நிலையில் FIFA உலகக்கோப்பையின் போது கியாரா அணிந்திருந்த பிங்க் நிற ஜம்ப் ஷூட் ட்ரெண்ட் செட்டராக மாறியுள்ளது.
ஜொலிக்கும் சிவப்பு நிற கட்-அவுட் ட்ரெஸின் மேல் சிவப்பு நிற ப்ளேஸர் என்ற கியாராவின் புதிய முயற்சி கியாராவின் பெஸ்ட் லுக்ஸ் லிஸ்டில் சேர தவறவில்லை என்றே சொல்லலாம்.
க்ளேமர் - எத்னிக் என எந்த உடையிலும் அசத்துபவரே ஒரு நல்ல மாடல் என்று சொல்வார்கள். அவ்வாறு பார்க்கையில் கியாரா புடவையிலும் கலக்கி தான் ஒரு சிறந்த மாடல் என நிருபித்திருப்பார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -