HBD Kiara Advani: 'கொஞ்சம் உன் காதலால் என் இதயத்தை நீ துடிக்க வை..' நடிகை கியாரா அத்வானி பிறந்தநாள் இன்று!
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை கியாரா அத்வானி.
ஆலியா அத்வானி என பெயர் கொண்ட இவர், தனது சினிமா எண்ட்ரிக்கு முன்னதாக கியாரா அத்வானி என பெயர் மாற்றி கொண்டார்.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபக்லி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கியாரா, 2016 ஆம் ஆண்டு வெளியான எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
லஸ்ட் ஸ்டோரீஸ், கபீர் சிங், பரத் எனே நேனு என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.
2021 ஆம் அண்டு வெளியான ஷேர்ஷா திரைப்படத்தில் இவர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்ததாக கூறப்படும் இவர்கள் இருவரும் இந்த வருட தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
அழகும் திறமையும் நிறைந்து திரையுலகில் ஜொலித்து வரும் கியாரா அத்வானிக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!