Cinema News: கே.ஜி.எஃப் படத்தில் அஜித்குமாரா? இன்று வெளியான சினிமா தகவல்கள்!
சங்கர்- கமல்ஹாசன் கூட்டணியை வெளிவந்த இந்தியன் 2 படத்திலிருந்து கம்பேக் இந்தியன் என்ற வீடியோ சாங் வெளியாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்திலிருந்து அஹம் ப்ரம்மாஷ்மி என்ற பாடலை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கலையரசன் நடித்துள்ள மெட்ராஸ்கரன் படத்தை வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கவிருக்கும் கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
2014 ஆம் ஆண்டு அனீஸ் இயக்கத்தில் ஜெய் மற்றும் நஸ்ரியா நடித்து வெளியான படம் திருமணம் எனும் நிக்காஹ். இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
1987 ஆம் ஆண்டு கே ரங்கராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து இருந்த படம் நினைவே ஒரு சங்கீதம். இப்படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -