Keerthy Suresh Wedding: கீர்த்தியின் திருமணத்தின் புடவையில் கலக்கிய த்ரிஷா! பொண்டாட்டியோடு போஸ் கொடுத்த அட்லீ - வைரல் போட்டோ!
15 ஆண்டுகளாக காதலித்து வந்த பள்ளிப்பருவ காதலரான ஆண்டனி தட்டிலை, நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணந்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமணத்தில், பல கோலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், அடுத்தடுத்து ஒவ்வொருவராக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய், த்ரிஷா ஜோடியாக தனி விமானத்தில் வர, இயக்குநர் மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார். அட்லீ மற்றும் மேலும் கீர்த்தியின் தோழியான கல்யாணி பிரியா தர்ஷன், மாளவிகா மோகனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொடுள்ளனர்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. கீர்த்தி திருமணத்தில் த்ரிஷா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் புடவையில் வந்து அசத்தியிருந்தனர்.
இதே போன்று பிரியாவும் புடவையில் வர, அட்லீ பைஜாமா அணிந்திருந்தார். இவர்களை தவிர தெலுங்கு பிரபலங்களான நானி மற்றும் அவரது மனைவி அஞ்சனா யெலவர்த்தியும் கலந்து கொண்டனர். எல்லோரது கண்ணும் இவர்கள் மீது தான் விழுந்துள்ளது. அந்தளவிற்கு காஸ்டியூமில் வந்து கலக்கியிருப்பார்கள்.
இந்நிகழ்ச்சியி விஜய் பட்டு வேஷ்டியில் வந்து அசத்தியிருப்பார். இதற்கு முன்னதாக விஜய்யை இது போன்று ஒரு தோற்றத்தில் பார்த்திருக்க முடியாது. விஜய் தன்னுடைய பாதுகாவலர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது.