Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
துணிவு படத்துக்குப் பின் நடிகர் அஜித்குமார் நடிப்பில் “விடா முயற்சி” படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதலில் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் விலகினார். நீண்ட இழுபறிக்குப் பின் இயக்குநர் மகிழ் திருமேனி விடா முயற்சி படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அஜித் படம் 2025- ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படக்குழு விடாமுயற்சி படத்தின் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கும் ஐந்தாவது பட,ம் விடாமுயற்சி. என்னை அறிந்தால், ஜீ, க்ரீடம், மங்காத்த உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மீண்டும் இருவரையில் திரையில் காணும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து தற்போது நடிகை த்ரிஷா அஜர்பைஜானில் செனறுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் த்ரிஷா. சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில் த்ரிஷா இருப்பதை ரசிகர்கள் கொண்டாடினர்.
லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தில் இருந்து அஜித், த்ரிஷா இருவரின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் அஜித் கருப்பு நிற கோட்-சூட் அணிந்து, த்ரிஷா சாம்பல் நிற சேலை அணிந்துள்ளார். இருவரும் கை கோர்த்து நடப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களிடையே விடாமுயற்சி படம் வெளியாகும் நாளின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -