Mamallapuram Dance Festival 2025 : மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா கோலாகலம்.. ஆர்ப்பரிக்கும் சுற்றுலா பயணிகள்..
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் டிசம்பர் 22 தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம் இந்தியாவிலேயே தமிழ்நாடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதலிடம் வகித்து வருகின்றது.
தமிழ்நாடு, உலகின் பழம்பெருமைகள் கொண்ட கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் தாயகமாக விளங்குகிறது.
இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகள் முழுவதும் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சமூக வலைதளங்களின் மூலம் நிகழ்ச்சிகள் நேரலையில் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் இந்திய பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
நேற்று 5ம் நாள் நிகழ்ச்சியில், கடலூர் சங்கர் சாரல் கலைக்கூடம் குழுவின் சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி, சென்னை ஸ்ரீ பவானி நாட்டியாலயா குழுவின் பரத நாட்டிய நிகழ்ச்சி, பொன்னேரி ஆதித்தமிழர் கலைக் குழுவின் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் கலைஞர்கள் அரங்கேற்றம் செய்தனர்.
நாட்டிய விழாவை கண்டு ரசிக்க ஏராளமான வெளிநாட்டினர் சொகுசு பேருந்து, கார், வேன் மற்றும் அரசுப் பேருந்துகளில் குவிந்து வருவதால் மாமல்லபுரம் களைகட்டி காணப்படுகிறது
தொடர்ந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றன