✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

அப்பா அருண் பாண்டியனுக்கு 60-ஆவது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்கள்! வைரல் போட்டோஸ்!

மணிகண்டன்   |  18 Jun 2025 02:03 PM (IST)
1

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையின் மூலமாக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் அருண் பாண்டியன். கடந்த 1982 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இளஞ்ஜோடிகள் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர், இந்தப் படத்திற்கு பிறகு விசுவுடன் இணைந்து சிதம்பர ரகசியம் என்ற படத்தில் நடித்தார். தனது 2ஆவது படத்திலேயே போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்.

2

அதன் பின்னர் தான் ஜெய்சங்கர், விஜயகாந்த் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ஊமை விழிகள் படத்தில் நடித்தார். இந்தப் படம் அருண் பாண்டியனின் சினிமா வாழ்க்கையில் புதிய திருப்பத்தை கொடுத்தது.

3

இந்தப் படம் மட்டுமின்றி படத்தில் வரும் தோல்வி நிலையென நினைத்தால் என்ற பாடலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. இதே போன்று இவரது நடிப்பில் வெளியான மற்றொரு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் இணைந்த கைகள் 200 நாட்களுக்கு மேல் ஓடியது கமல் - விஜய் படங்களுக்கே டஃப் கொடுத்தது.

4

இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ராம்கி, நாசர், நிரோஷா, சிந்து, ஸ்ரீவித்யா, செந்தில் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருருந்தனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தான். உயரமான இடத்திலிருந்து ரோப் மட்டும் கட்டிக் கொண்டு குதித்து ராம்கியை காப்பாற்ற வேண்டும். இந்தக் காட்சியில் அருண் பாண்டியன் மாஸ் காட்டியிருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு அருண் பாண்டியனுக்கு ஏராளமான ஆக்ஷன் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

5

கோட்டை வாசல், துறைமுகம், ரோஜா மலரே, உண்மை போர், வீரபாண்டி, காற்றுக்கென்ன வேலி, தேவன், கோவை பிரதர்ஸ் என்று ஏராளமான படங்களில் நடித்தார். சினிமாவில் ஆரம்பகாலங்களில் ஹிட் கொடுத்ததைப் போன்று அவரால் ஹிட் கொடுக்க முடியவில்லை. இதனால் சினிமா வாய்ப்புகள் குறைந்தது. இப்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

6

நடிகர் மட்டுமின்றி இயக்குநர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்த அருண் பாண்டியன் அரசியலிலும் கால் பதித்தார். இந்த நிலையில் தான் மகள் கீர்த்தி பாண்டியன் உடன் அன்பிற்கினியாள் படம் மூலமாக் கம்பேக் கொடுத்த அருண் பாண்டியன் ஆதார், டிரிக்கர், அதோமுகம், டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

7

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அருண் பாண்டியன் தனது 60 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருக்கிறார். இவருடைய மூன்று மகள்களும் தற்போது அப்பா அருண் பாண்டியன் மற்றும் அம்மா விஜயாவுக்கு 60-ஆம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்து அழகு பார்த்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • அப்பா அருண் பாண்டியனுக்கு 60-ஆவது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்கள்! வைரல் போட்டோஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.