தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி..! அழகில் அம்மா தேவயானியை மிஞ்சிய மகள் இனியாவின் போட்டோ ஷூட்!
தமிழில், 1995-ஆம் ஆண்டு வெளியான 'தொட்டாச் சிணுங்கி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை தேவயானி. தன்னுடைய முதல் படத்திலேயே கொஞ்சம் ஓவர் கிளாமரை அள்ளித்தெறித்த தேவயானி, இதை தொடர்ந்து கல்லூரி வாசல் படத்தில் நடித்தார்.
இந்த இரு படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், 1996-ஆம் ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக இவர் நடித்த 'காதல் கோட்டை' படம், இவரை கோலிவுட் திரையுலகின் உச்ச நடிகையாக மாற்றியது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு விருது, மற்றும் ஃபிலிம்பேர் விருதை வென்றார்.
'காதல் கோட்டை' படத்தின் வெற்றி தேவயானியின் திரையுலக வாழ்க்கையை ஒரே நாளில் திருப்பி போட்டது. இந்த படத்திற்கு பின்னர் கவர்ச்சி வேடங்களை ஏற்று நடிப்பதை தவிர்த்தார். தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்தார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே... இவரை வைத்து நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் போன்ற படங்களை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். ஆரம்பத்தில் பெற்றோர் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பின்னர் ஏற்று கொண்டனர்.
நடிகை தேவயானிக்கு இனியா - பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். மேலும் தமிழில் தரமான கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் தேவயானி, சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட, தேவயானியை மகள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர் குரல்வளத்தை பாராட்டி, நடுவர்களும் இவரை அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்தனர்.
இனியா தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்ட நிலையில், சினிமாவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த துவங்கியுள்ளார். கூடிய விரைவில் நடிகையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த நிலையில் தான் தேவயானியின் மகள் இனியா, அழகில் அம்மாவையே மிஞ்சும் விதத்தில்... எளிமையான சேலை கட்டிக்கொண்டு, எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.