Petta Uncut Video : இளையராஜாவின் இசையில் ரஜினிக்கும் சிம்ரனுக்கும் இடையே மலரும் ரொமான்ஸ்!
இன்று இதே நாளில் 5 வருடங்களுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், சசிகுமார், திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான பேட்ட படம் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபல ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிக்கொண்டு இருக்கும் மாளவிகா மோகனன், இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக வெளியான பேட்ட, வசூல் வேட்டை செய்து மாஸ் காட்டியது.
படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் டவிட்டர் பக்கத்தில் ஸ்பெஷல் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
பேட்ட படத்தில் ரஜினிக்குக்கும் சிம்ரனுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளை ஒன்றிணைத்து, இளையராஜாவின் “என் இனிய பொன் நிலாவே” பாடல் மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
முதிர்ச்சியானவர்களுக்கு இடையே மலரும் காதலை அழகாக காட்டும் இப்படத்தின் இந்த புதிய அன்-கட் வெர்ஷன் வீடியோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -