Japan Audio Launch : பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா!
பலதரப்பட்ட இயக்குநர்களின் மாறுபட்ட கதைக்களங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டத்தை கொடுக்கும் நடிகர் கார்த்தி, நடித்துள்ள படத்தை இயக்குநர் ராஜிவ் முருகன் இயக்கியுள்ளார்.
இவர் ஜோக்கர்,குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
ஜப்பான் திரைப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்துள்ள ஜப்பான், கார்த்தியின் 25வது திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
படத்தின் இசை வெளியீட்டு விழா, இம்மாதம் 28-ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது.
அடுத்த மாதம் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கு போட்டியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் களத்தில் இறங்கவுள்ளது.