Japan Trailer Announcement : சில மணி நேரத்தில் வெளியாகவிருக்கும் ஜப்பான் பட ட்ரெய்லர்!
பருத்திவீரன் படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமான கார்த்தி, தான் நடிக்கும் படத்தின் கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார்.
ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், காஷ்மோரா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்த பின், ஜப்பான் எனும் படத்தில் ஒப்பந்தமானார்.
ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், கே.எஸ்.ரவிகுமார், சுனில், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை ஆகியோர் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர், ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தீபாவளிக்கு ரிலீஸாகும் ஜப்பான் படத்தில் நடித்திருக்கும் கார்த்தியின் வித்தியாசமான கெட்-அப், உடல் மொழி என அனைத்தும் பார்க்க நன்றாக இருந்தது.
இந்நிலையில், இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜப்பான் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இரவு பத்து மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிவிடும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.