Karthi 27 update : கார்த்தியின் படங்கள் குறித்து வரும் அடுத்தடுத்த தகவல்கள்..இவர் தான் அடுத்த படத்தின் இயக்குநரா?
தமிழ் சினிமாவில் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் அறிமுகமாகி பின்னர் உச்சம் தொட்டவர் கார்த்தி.
அதைதொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல சிறுத்தை என தொடர் ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஸ்டார் ஆனார்.
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிமுக காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து, கார்த்திக் 26 படத்தை சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமரசாமி இயக்குகிறார் என தகவல் வெளியாகின.
தற்போது, கார்த்தி 27 படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்க உள்ளார் மற்றும் இதில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி அடுத்தடுத்த தகவல் வந்தாலும் அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்த்து கார்த்தி ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.