Aishwarya Rajesh : துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் நீக்கமா? அதிரடி காட்டிய ஜி.வி.எம்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “துருவ நட்சத்திரம்”
கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது
இப்படத்தின் டீசர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் ஸ்டைல் வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு 5 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாவில்லை. இதற்கு பொருளாதார சிக்கலே காரணம் என நெருங்கிய திரை வட்டாரங்கள் கூறினர்.
கடந்த சில நாட்கள் முன்னர் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது. அதைதொடர்ந்து இந்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது, இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.