HBD Bobby Deol : ஹாப்பி பர்த்டே உதிரன்...ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு பாபி தியோலை வாழ்த்திய கங்குவா படக்குழு!
பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல், 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தரம் வீர் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின் 1995 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
சந்தீப் வங்கா ரெட்டியின் இயக்கத்தில் ரன்பீர், ராஷ்மிகா நடிப்பில் உருவான அனிமல் படத்தில் அப்ரார் எனும் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்தார்.
அப்படத்தில் இடம்பெற்ற ஜம்மால் குடு பாடல், படம் வெளியான பின்னர் செம ட்ரெண்டாகியது. தலை மீது கிளாஸ் வைத்து பலரும் இன்டாவில் ரீல்ஸ் பதிவிட்டனர்.
இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் பாபி தியோல் உதிரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு ஒரு அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இதனை தொடர்ந்து, இன்று பிறந்தநாள் காணும் பாபி தியோலுக்கு வாழ்த்து தெரிவித்து கங்குவா படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது