Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் வருகை தந்திருந்தனர்
அத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோர் வந்திருந்தனர்
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “இன்னைக்கு விஜய் நடிகராகி படிப்படியாக தனது திறமை, ஒழுக்கம் மற்றும் உழைப்பால் இந்த சினிமாவுலகில் மேலே ஒரு இடத்துல இருக்காங்க. அடுத்ததாக அரசியல், சமூக சேவைன்னு போறாங்க. இதுல எனக்கும் விஜய்க்கும் போட்டின்னு சொல்றப்ப மனசு கஷ்டமா இருக்குது. விஜய்யும் சரி, நானும் சரி எங்களுடைய பேச்சுகளில் எங்களுக்கு நாங்களே போட்டின்னுதான் சொல்லியிருக்கிறோம். விஜய் வந்து எனக்கு போட்டின்னு நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை, கௌரவம் இல்லை.” என குறிப்பிட்டார்.
“விஜய்யும் அப்படி நினைத்தால் அவருக்கும் மரியாதையும், கௌரவமும் இல்லை. தயவுசெய்து இரண்டு பேரோட ரசிகர்களும் எங்கள் இருவரையும் ஒப்பிடாதீர்கள். இது என்னோட அன்பான வேண்டுகோள்” - ரஜினிகாந்த்
அத்துடன் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பா ரஜினிகாந்தை சங்கி என விமர்சிக்கிறார்கள். எனக்கு அதைக் கேட்டதும் வருத்தமாக உள்ளது. ரஜினி ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. இந்த படத்தில் அவரைத் தவிர யாரும் தைரியமாக நடித்திருக்க மாட்டார்கள்.” என பேசினார்.