Chandramukhi 2: முழுசா சந்திரமுகியா மாறிய கங்கனாவை பார்..சந்திரமுகி 2வில் கங்கனாவின் போஸ்ட்ரை வெளியிட்டது படக்குழு!
பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'சந்திரமுகி' திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அங்கமான ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் தோற்றம் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி கங்கனா ரனாவத்தின் முதல் தோற்றம் இன்று வெளியாகி இருக்கின்றது.
சந்திரமுகி-2 படம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.