Inimel Teaser : ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்..வெளியானது இனிமேல் டீசர்!
சுபா துரை | 21 Mar 2024 10:35 PM (IST)
1
கமல் ஹாசன் தயாரிப்பில் ஷ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஆல்பம் இனிமேல்.
2
இந்த பாடலிற்கு கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுத ஷ்ருதி ஹாசன் இசையமைத்துள்ளார்.
3
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இந்த பாடலின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
4
லோகேஷின் பிறந்தநாள் அன்று இந்த ஆல்பத்தின் பெயர் வெளியிடப்பட்டது, தொடர்ந்து இனிமேல் பாடலின் டீசர் வெளியாகி உள்ளது.
5
தன் படங்களிலே அதிகமான ரொமான்ஸ் சீன்களை வைக்காத லோகேஷ், இந்த பாடலில் ஷ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
6
மேலும் இப்பாடல் வரும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.