Kamal Haasan Wishes : நாயகன் கமல்ஹாசனுக்கு பொழியும் வாழ்த்து மழை!
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன்.இத்துணை நீண்ட திரைவாழ்வுஅத்துணை பேர்க்கும் வாய்க்காது.வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர். எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்?உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும். வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்.” - வைரமுத்து
“எங்கள் அன்பிற்குரிய டார்லிங் லெஜண்ட் கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.” - குஷ்பு
“பிறந்தநாள் வாழ்த்துகள் கமல் சார். உங்கள் மூலம் சினிமாவின் மேஜிக்கை உணர்வது எங்களுக்கு பெருமையாக உள்ளது. மீண்டும் சந்திப்போம் சக்தி..” என திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
சூர்யா, ஆமிர் கான் மற்றும் ரவி கே.சந்திரன் ஆகியோர் கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
“நடிகர், லெஜண்ட், ஐகானான உங்களை பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன் சார். உங்களுடன் பணிபுரிவது என் பாக்கியமாகும்.” - நடிகர் பிரபாஸ்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -