Rajinikanth : ரஜினிக்கு குவியும் பரிசு மழை..சொகுசு காரை வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்!
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான நிலையில், ரூ.600 கோடி வசூலைக் கடந்தாக கூறப்படும் நிலையில் இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் உருவெடுத்துள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த வெற்றியைக் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை முன்னிட்டு ரஜினிகாந்துக்கு ரூ.1.24 கோடி மதிப்புள்ள BMW x7 ரக சொகுசு காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
ரஜினியிடம் 1.24 கோடி மதிப்புள்ள BMW x7 மற்றும் BMW i7 ஆகிய இரண்டு ரக சொகுசு கார்களை காட்டி அதில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கலாநிதி மாறன் கேட்டுக் கொண்டார். அதில் ரஜினிகாந்த் BMW x7 -ஐ தேர்வு செய்தார்.
மேலும் ஜெயிலர் படத்தின் சம்பளத் தொகையையும் செக்காக கலாநிதி மாறன் நேற்று ரஜினிகாந்திடம் வழங்கினார் .
தற்போது ரஜினியின் புதிய சொகுசு காரின் புகைப்படங்களில் இண்டர்நெட்டில் வலம் வருகிறது.