✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

40 வயதில்... குழந்தை பெற்ற பிறகும் இப்படியா? பிகினி உடையில் ஜலக்கிரீடை செய்த காஜல் அகர்வால்!

மணிகண்டன்   |  30 Jun 2025 06:57 PM (IST)
1

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால், பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் இவருடைய தந்தை தொழில் காரணமாக குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனார்.

2

காஜல் அகர்வால், தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும், நடிப்பில் ஆர்வம் இருந்ததால் திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். அந்த சமயத்தில் தான் ஹிந்தியில் 2004 ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான Kyun! Ho Gaya ந என்கிற திரைப்படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

3

இதைத் தொடர்ந்து தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றி இவருக்கு அடுத்தடுத்த தெலுங்கு படங்களின் வாய்ப்பை பெற்று தந்தது.

4

பின்னர் தமிழில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக 2008 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'பழனி' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் பேரரசு இயக்கியிருந்தார். இந்த படம் கலையான விமர்சனங்களையே பெற்றது.

5

இதைத் தொடர்ந்து தமிழில் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, போன்ற படங்களில் நடித்தாலும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடிபோட்டு வந்தார்.

6

தமிழில், சிறந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க துவங்கிய காஜல் அகர்வாலுக்கு, திருப்பு முனையை ஏற்படுத்தி தந்த திரைப்படம் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'நான் மகான் அல்ல'. இந்த படத்திற்கு பின்னர் முன்னணி நடிகர்கள் நடிகைகள் லிஸ்டில் இணைந்த காஜல் அகர்வால் சூர்யாவுக்கு ஜோடியாக மாற்றான், தளபதி விஜய் ஜோடியாக துப்பாக்கி, போன்ற படங்களில் நடித்தார்.

7

தளபதி விஜய்யுடன் இவர் ஜோடி போட்டு நடித்த துப்பாக்கி திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெறவே மீண்டும் விஜய்யுடன் ஜில்லா, மெர்சல் போன்ற படங்களிலும் நடித்தார். அதேபோல் அஜித்துக்கு ஜோடியாக 'விவேகம்' படத்திலும் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

8

முன்னணி நடிகையாக இருக்கும் போதே, தன்னுடைய நீண்ட நாள் காதலரான கௌதம் கிச்சலுவை காதலித்து 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.

9

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த காஜல் அகர்வாலுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மகன் ஒருவரும் பிறந்தார். நடிப்பு - குடும்பம் என இரண்டிலும் சரிசமமாக கவனம் செலுத்தி வருவோம் காஜல் அகர்வால், நடிப்பில் கடைசியாக தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் கண்ணப்பா திரைப்படம் வெளியானது. இதில் பார்வதி தேவியாக காஜல் நடித்துள்ளார்.

10

இந்நிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய வெக்கேஷனை கொண்டாடும் விதமாக குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்றுள்ளார். அப்போது தங்கை மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட பிகினி உடை புகைப்படங்களை காஜல் அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட... அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

11

மேலும் தற்போது காஜல் அகர்வால் கைவசம், ஹிந்தியில் தி இந்தியன் ஸ்டோரி, தமிழில் இந்தியன் 3, மற்றும் ஹிந்தியில் உருவாகும் ராமாயண பார்ட் 1 ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 40 வயதாகியும் குறையாத கவர்ச்சியில் லூட்டி அடிக்கும் காஜல் அகர்வால் புகைப்படங்கள் தற்போது சில விமர்சனங்களையும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 40 வயதில்... குழந்தை பெற்ற பிறகும் இப்படியா? பிகினி உடையில் ஜலக்கிரீடை செய்த காஜல் அகர்வால்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.