Jyotika : ரசிகை முதல் தயாரிப்பாளர் வரை.. அக்ஷய் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த ஜோ!

2020ல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் சூரரைப் போற்று படம் வெளியானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இந்த படத்தை குனித் மோங்காவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்ப்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்தனர்.

இந்நிலையில் அப்படத்தின் ஹிந்தி வெர்ஷனான சர்ஃபிரா இன்று (ஜூலை 12) வெளியாகியுள்ளது.
சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமாரும் அபர்ணா நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதனும் நடித்துள்ளனர்.
படத்தின் ரிலீஸையொட்டி நடிகை மற்றும் தயாரிப்பாளரான ஜோதிகா இன்ஸ்டாவில் ஸ்டோரி மற்றும் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அக்ஷய் குமாருடன் எடுத்த புகைப்படத்தில், “மனதை உருக்கும் உங்கள் நடிப்பிற்காக படம் வெற்றி பெற வாழ்த்துகள் அக்ஷய் குமார். அப்போது ரசிகையாக உங்களின் போஸ்டரை எனது படுக்கை அறையில் ஒட்டி வைத்து இருந்தேன். இப்போது உங்களின் 150 வது படத்தை தயாரித்து உள்ளேன். இந்த அற்புதமான தருணத்தை காலமானது எனக்கு செதுக்கி வைத்துள்ளது.” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் ஜோதிகா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -