என்னதான் பிரச்சனை?நோட்டீஸ் அனுப்பிய தனுஷ்; அறிக்கை வெளியிட்ட நயன்தாரா? விவரம்!
நயன்தாரா பற்றி நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள ஆவணப்படம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை நடிகர் தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. நயன்தாராவின் ஆவணப்படத்திற்காக நானும் ரவுடிதான் படத்தின் பி.டி.எஸ் காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ் மறுத்துவிட்டதாகவும் 3 நொடி காட்சி ஒன்றை பயண்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநல்ல நடிகர் மற்றும் பிரபலமான இயக்குனருமான நீங்கள், உங்கள் தந்தை மற்றும் உங்கள் சகோதரரின் ஆதரவுடனும், ஆசியுடனும், இதைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சினிமா துறையில் எவ்வித பின்னணியும் இல்லாத எனக்கு, அதோடு ஒரு பெண்ணாக இந்தத் துறையில் இன்று நான் பெற்றிருக்கும் இடத்திற்கு வர போராட வேண்டியுள்ளது.
வணிக நிர்ப்பந்தங்கள் மற்றும் பணப்பிரச்சினைகள் உங்களின் மறுப்பை கட்டாயமாக்கினால் அது புரியும். ஆனால் உங்களின் இந்த முடிவு எங்கள் மீதான உங்கள் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே என்பதும், நீங்கள் வேண்டுமென்றே இவ்வளவு காலம் முடிவெடுக்காமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள் இன்றுவரை பாராட்டப்படுகின்றன, ஏனென்றால் பாடல் வரிகள் உண்மையான உணர்ச்சிகளிலிருந்து வந்தவை. எங்கள் ஆவணப்படத்தில் நாங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த இசை இதைக்காட்டிலும் வேறு இல்லை என்பதை அறிந்தும், அதைப் பயன்படுத்த எங்களுக்கு வாய்ப்பளிக்க நீங்கள் மறுத்தது என் இதயத்தை உடைத்தது.
சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்தார். இந்த படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் தோன்றி நடனமாடினார். இந்த பாடல் குறித்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லோக்கல் பாய்ஸ் பாடலுக்கு நயன்தாரா எங்கள் நண்பர் என்பதால் அவரை நடிக்க கேட்டோம். எதிர்நீச்சல் படத்திற்கு அவரை கேட்டதும் காசே வாங்காமல் நடித்து கொடுத்தார். நீங்கள் என்னுடைய ஃப்ரண்ட் அதனால் நான் பணம் வாங்கப்போவதில்லை' என நயன்தாரா சொன்னதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
மரியான் படத்தில் நடித்த நடிகை பார்வதி திருவொத்து நயன்தாராவின் பதிவிற்கு ஃபயர் எமோஜி கமெண்ட் செய்துள்ளார். மேலும் நையாண்டி படத்தில் நடித்த நஸ்ரியா , வடசென்னை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், 3 படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் , நடிகை இஷா தல்வார் , கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஷ்வர் , அனா பென் , அஞ்சு குரியன் , மஞ்சிமா மோகன் , ஐஸ்வர்யா லெக்ஷ்மி , அதிதி பாலன் உள்ளிட்ட நடிகைகள் இந்த பதிவிற்கு லை செய்துள்ளார்கள்.
இந்த விவகாரத்தில் நயன்தாரா - தனுஷ் என இருவருக்கு ஆதரவாகவும் சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -