Tamil Movies : ஜூலை 30 ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள்!
1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் ஜென்டில்மேன்.
அர்ஜுன் மற்றும் கவுண்டமணி பல பணக்காரர்களிடம் உள்ள கருப்பு பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். அர்ஜுனை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடுகின்றனர். அர்ஜுன் எதற்காக கொள்ளை அடிக்கிறார்? அதன் பின்னணி என்ன ? என்பதே மீத கதை.
இப்படத்தில் நம்பியார், மனோரமா, வினீத், செந்தில், மது ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 31 வருடங்களை நிறைவு செய்கிறது.
2004 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் பிரசன்னா நடித்த படம் அழகிய தீயே.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நவ்யா நாயர், எம் எஸ் பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ரமேஷ் விநாயகம் இசையில் படத்தில் விழிகளின் அருகினில் வானம் என்ற பாடல் சிறப்பாக இருக்கும். இப்படம் வெளியாகி இன்றுடன் 20 வருடங்களை நிறைவு செய்கிறது.