13 Years of Ko : என்னமோ ஏதோ..13 ஆண்டுகளை நிறைவு செய்த ஜீவாவின் கோ!
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, பிரகாஷ் ராஜ், அஜ்மல் அமீர்,பியா, கார்த்திகா நாயர் நடிப்பில் வெளிவந்த படம் கோ.
அயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்தும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் கோ படம் மூலம் மீண்டும் இணைந்தனர். அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது. அப்போது கோ படத்தின் என்னமோ ஏதோ பாடல், பலரின் ரிங் டோனாகவே இருந்தது.
இந்த படத்தின் நாயகனான ஜீவா செய்தி ஊடகத்தில் வேலைப்பார்க்கும் புகைப்பட கலைஞராக நடித்திருந்தார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பஞ்ச் வசங்கள் பெரிதாக இடம் பெறவில்லை.
படத்தில் கோட்டா சீனிவாச ராவ் சொல்லும் வசனம் இன்று பார்த்தாலும் நகைச்சுவையாக இருக்கும். “தமிழ் பேப்பர் ஆபீஸ்தானே இது... அப்புறமென்ன இங்கிலீசு பேசுற தமிழ்ல பேசு” போன்ற காட்சிகள் சிறப்பாக இருக்கும்.
20 கோடியில் பட்ஜெட்டில் உருவாகி 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்நிலையில், ஜீவாவின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது