Coconut Stick Ice : அடிக்குற வெயிலுக்கு இதமா தேங்காய் குச்சி ஐஸ்..செய்முறை இதோ!
அரை மூடி தேங்காயை துண்டுகளாக்கி எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அல்லது தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளலாம்.
தேங்காய் உடைத்த தண்ணீரையும் இந்த தேங்காய் உடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து இதை தனியே வைத்து விட வேண்டும்.
4 டேபிள் ஸ்பூன் அளவு சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதனுடன் 4 டேபிள் ஸ்பூன் அளவு பால் பவுடர் சேர்க்கவும். இதனுடன் அரை கப் அளவு பால் சேர்க்கவும்.
இதை கட்டி இல்லாமல் நன்கு கலந்து விடவும். நாம் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை கரண்டியால் எடுத்து ஊற்றினால் தேங்காய் பாலின் பதத்தில் ஊற்ற வேண்டும்.
கலவை அதிக திக்காக இர்ந்தால் மேலும் 2 அல்லது 3 ஸ்பூன் அளவு பால் சேர்த்து இதை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்து விடவும். இதை ஐஸ் மோட்ல் இருந்தால் அதில் ஊற்றி வைக்கலாம்.
அல்லது சிறிய அளவு சில்வர் டம்ளரில் ஊற்றி வைக்க வேண்டும். இதை பிளாஸ்டிக் கவரால் கவர் செய்து ஃப்ரீசரில் குறைந்தது 8 மணி நேரம் வைக்க வேண்டும். பின் இதை எடுத்து பிளாஸ்டிக் கவரை நீக்கி விட்டு, ஐஸின் நடுவில் ஐஸ் குச்சியை செருகி டம்ளரை தண்ணீரில் நனைத்து இரண்டு நிமிடத்திற்கு பின் ஐசை மோல்ட் அல்லது டம்ளரில் இருந்து எடுத்து விடலாம்.