Kalki 2898 AD : அஸ்வத்தாமனாக அமிதாப் பச்சன்.. டிரெண்டிங்கில் கல்கி படத்தின் க்ளிம்ப்ஸ்!
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, தீபிகா படுகோன், துல்கர் சல்மான், தீஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்து வரும் படம் கல்கி 2898 ஏடி.
கோடிக்கணக்கான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், கல்கி படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்த க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.இவர், மகாபாரத புராணக்கதையில் வரும் துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமனாக நடிக்கிறார்.
பாண்டவர்களின் மகனை கொன்றதன் காரணமாக, கலியுகம் முடியும் வரை தனியாகவே இறவாமல் இருப்பாய் என அஸ்வத்தாமனை, கிருஷ்ணன் சபித்துவிடுவார். அதனால் இப்போது வரை அவர் உயிருடன் இருக்கிறார் என்பது நம்பிக்கை.
கல்கி படம் கலியுகத்தின் முடிவில் நடக்கும் போரை அடிப்படையாக வைத்து எடுக்கும் கற்பனை கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது நன்றாக தெரிகிறது.
இப்போதைக்கு ஒரே ஒரு கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வந்த நிலையில், அடுத்தடுத்து மற்ற கதாபாத்திரங்களின் க்ளிம்ப்ஸ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.