Iraivan : ஒரு வழியா படத்தோட ரிலீஸ் தேதியை அறிவிச்சிட்டாங்கப்பா.. உறுதி செய்யப்பட்ட இறைவன் ரிலீஸ் தேதி!
ஜோன்ஸ் | 09 Jun 2023 11:54 AM (IST)
1
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் நடப்பாண்டு அகிலன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியானது
2
தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன், ஜெயம் ரவி 30 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
3
இறைவன் படத்தை அஹமத் இயக்க, ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
4
இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது
5
இறைவன் படத்தின் ரிலீஸ் தேதியையும் போஸ்டரையும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
6
அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.