Janhvi Kapoor:கலர்ஃபுல் ஆடையில் மிளிரும் ஜான்வி கபூர் - சமீபத்திய க்ளிக்ஸ்!
நடிகை ஸ்ரீதேவி - பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடியாக இருக்கிறார் ஜான்வி கபூர். இவர் அணியும் உடை, லுக் உள்ளிட்டவைகளால் டிரெண்டிங்கில் இருப்பார்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது ஜான்வி கபூர் மயில் போல உடையணிந்து வந்தார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அம்பானியின் மகன் அனந்த மற்றும் ராதிகா திருமண மெஹந்தி நிகழ்வில் பங்கேபதற்காக வடிவமைக்கப்பட்ட குஜராத் லஹங்கா உடையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஜான்வி கபூர், ரோஷன் மேத்யூஸ், குல்ஷன் தேவய்யா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் உலாஜ் படத்திலிருந்து மிரட்டலான ஒரு போஸ்டர் வெளியானது.
இந்தியில் வெளியான 'தடக்' என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர். அதே சூட்டில் ஹிந்தி சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவுக்குள் என்ட்ரி என கலக்கி வருகிறார். இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.