Janhvi Kapoor Marriage : ஸ்ரீதேவி மகளுக்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?
தயாரிப்பாளர் போனி கபூர் - முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆர் ஆர் ஆர் படம் மூலம் உலகளவில் ஃபேமஸான ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம் மூலம் டாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
திரைப்படங்களை தாண்டி, மாடலிங்கிலும் விளம்பர படங்களிலும் மாஸ் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இவர், நடிகர் ஷிகர் பஹாரியாவை நீண்ட நாள் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் கூடிய விரைவில் திருப்பதியில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் பரவி வருகிறது.
அத்துடன் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகிய மைதான் படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கின் போது, ஷிக்கு என பொறிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார் ஜான்வி.
இது போக, காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், “ஷிகர் பஹாரியா எனக்கு முக்கியமானவர்” என்று ஜான்வி குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -